சமூக நீதியை சமூக இயக்கங்கள்தான் காப்பாற்றும் – மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்:
சமூக நீதிக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக நீதி வேண்டும் என்றால் சமூகநீதி இயக்கங்கள் தான் போராட வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் கூறுகிறார்கள். இந்தியாவில் சமூக நீதியின் ஒரு பகுதியாக பெண்கள் சொத்துரிமை 2005இல் தான் சட்டமாகிறது. ஆனால் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் 1989லயே அன்றைய முதலமைச்சர் என்.டி.ராமராவ் அவர்கள், பரம்பரை சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்.
தென் மாநிலங்கள் தான் சமூக நீதிக்காக முன்னோடிகளாக திகழ்கின்றன. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி எதுவும் இல்லை. அங்கே சமூக நீதி செயல்படும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் 75 பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். எல்லா வகுப்பினரும் அதில் இருந்தாலும் அந்தந்த பிரிவினரின் சதவிகிதத்திற்கு ஏற்ப நீதிபதிகள் பதவி எண்ணிக்கை அமைய வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. மனு சட்டம் தான் அவன் வேண்டும் இவன் கூடாது என்று பிரிவினை வாதம் பேசியது. ஏதோ ஒரு காரணம் காட்டி சில நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ஜஸ்டிஸ் பால் வசந்தகுமார், ஜஸ்டிஸ் சுதாகர், இவர்கள் வரிசையில் ஜஸ்டிஸ் சிவஞானமும் பாதிக்கப்பட்டவர் தான். அதற்கு காரணம் அவர் அளித்த இரண்டு முக்கிய தீர்ப்புகள் தான் என்று நினைக்கிறேன். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மூடியது சரியானது என்றும் இரண்டாவது எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது காரணமாக இருக்கலாம். நாடு முழுவதும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் சமூக நீதி போராளிகளான அம்பேத்கர் பெரியாரின் அடிப்படை கொள்கைகள். அது வெற்றி பெற வேண்டும். இவ்வாறு மேனாள் நீதியரசர் ஆற்றிய உரை Periyar Vision OTT-இல் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று இந்த காணொலி வலைதள பதிவை இன்றே பாருங்கள் பகிருங்கள். நன்றி!
– வி. சுவாமிநாதன்
தென்காசி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
