உலகச் செய்திகள்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி!!

பெய்ஜிங், டிச. 26- அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் அரிய வகை காந்த தாதுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா உரிமம் வழங்கி உள்ளது. ஜெய் உஷின் மற்றும் மகிந்திரா, மாருதி சுசூகி, ஹோண்டா மோட்டார்ஸ்க்கு தாது விற்கும் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டது. வாகனங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவத்துறை மற்றும் ராணுவ தளவாட தயாரிப்புக்கு அரிய காந்த உலோகம் பயன்படுகிறது.

பிரான்ஸ் அஞ்சல் சேவை மீது
ரஷ்யா சைபர் தாக்குதல்

பாரீஸ், டிச. 26- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரான்சின் தேசிய அஞ்சல் சேவை மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. லா போஸ்ட்டி எனப்படும் பிரான்ஸ் தேசிய அஞ்சல் சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் கடந்த 22.12.2025 முதல் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பார்சல் விநியோகம் முடங்கி உள்ளது. 3 நாட்களாகியும் நேற்று (25.12.2025) வரை இந்த முடக்கம் முழுமையாக சரி செய்யப்படாததால் அஞ்சலக வங்கி சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதலுக்கு ‘நோநேம்057’ எனும் ரஷ்ய ஹேக்கிங் குழு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக இந்த வழக்கை பிரான்ஸ் உளவுத்துறையான டிஜிஎஸ்அய் எடுத்து விசாரித்து வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்ய ஹேக்கர்கள் அடிக்கடி சைபர் தாக்குதல்கள் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்

உலக செய்திகள்

ஹூஸ்டன், டிச. 26- இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பத்மஜா படேல் டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பத்மஜா படேல், பரோடா மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்காவில் மருத்துவ பயிற்சிகளை முடித்தார். அதைத்தொடர்ந்து நட்ஜ் ஹெல்த் நிறுவனத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாகவும், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் லைஃப் ஸ்டைல் மெடிசின் தலைவராகவும், மிட்லான்ட் குவாலிட்டி அலையன்ஸ் மற்றும் ஹெல்த்தி சிட்டி மிட்லான்ட் ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலும் பணியாற்றுகிறார். இந்நிலையில் பத்மஜா படேல் டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு, உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்களை தடுப்பதிலும், நிர்வகிப்பதிலும் உணவுகளின் பங்கை ஆராய்ச்சி செய்கிறது.

2025 கடினமாக அமைந்தது;
2026 இதைவிட மோசமாக இருக்கும்:
இத்தாலி பிரதமர் பேச்சு

உலக செய்திகள்

ரோம், டிச. 26- இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது அலுவலக ஊழியர்களிடம், 2026ஆம் ஆண்டு நடப்பாண்டை விட இன்னும் கடினமாக இருக்கும் என்று எச்சரித்தார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் பேசியதாவது: 2025ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமாக இருந்தது. ஆனால் கவலைப்பட வேண்டாம். அடுத்தாண்டு இன்னும் மோசமாக இருக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்குமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஏனென்றால் இந்த அசாதாரண நாட்டின் சவால்களுக்கு நாம் தொடர்ந்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தாண்டின் இறுதி அமைச்சரவை கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் தயாராகி வரும் வேளையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுத விற்பனைக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆணையை அமைச்சரவை கூட்டம் விவாதிக்க உள்ளது. இத்தாலிய பிரதமரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்வினையாற்றி உள்ளனர்.

உலகம் அழியப்போகும்
போது வரும்  ஏசுவாம்

என்று கூறி பல ஆயிரம் கோடிகளை
ஏமாற்றிய நபர் கானாவில் கைது

கானா, டிச. 26- கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோஹா என்பவர், டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியும் என்றும், பெரும் பிரளயம் (வெள்ளம்) ஏற்படும் என்று கூறி நான் 7 பெரிய படகு செய்கிறேன் அதில் அனைவரும் வரவேண்டும் என்று கூறி பெரிய அளவு தொகை வசூலித்தார். ஆனால் மழை எதுவும் வரவில்லை அதே நேரத்தில் அவர் மக்கள் கொடுத்த பணம் என்னுடைய பிராத்தனையின் மூலம் கடவுள் அவர்களிடம் கொடுத்தார் தற்போது அதைகடவுளிடமே திரும்பச் சென்றுவிட்டது என்று கூறினார்.

இதனை அடுத்து அவரை மோசடி மற்றும் நம்பவைத்து ஏமாற்றுதல் பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கில் கானா நாட்டு காவல்துறை கைதுசெய்துள்ளது

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *