டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை சீர்குலைக்க பாஜ ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; இந்து மதவாத கும்பலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்; இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆளும் மாநிலங்களில், பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை:
* கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, அசாமின் நல்பாரி நகரில் உள்ள ஒரு மறைமாவட்டப் பள்ளிக்குள், சங்கி அமைப்புகள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் சேதப்படுத்தினர். அதே குழுவினர், அந்த நகரத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களையும் சேதப்படுத்தி இருந்தனர்.
* உத்தரகாண்டின் காஷிபூரில் காஷ்மீர் சால்வை வியாபாரி சங்கி கும்பல்களால் தாக்கப்பட்டார், குப்வாராவைச் சேர்ந்த பிலால் கானியைத் தாக்கியபடியே, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிடுமாறு வற்புறுத்தும் காணொலி இணையத்தில் பதிவாகியிருந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசாவில் ஒரு பெங்காலி முஸ்லிம் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பாஜக ஆளும் மாநிலங்களில் பெங்காலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்படும் துன்புறுத்தல் பிரச்சாரத்தின் நேரடி விளைவு தான் என்று குற்றம் சாட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக அரசு மீது கண்டனம்.
* தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செவிலியர்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றனர்
தி இந்து:
* பண்டைய காலம் தொட்டே” உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்டு வருவதாக ஸ்தாநீக பட்டர்கள் சாட்சியம்: 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் குன்றில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தபோது, சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நான்கு ஸ்தாநீக பட்டர்கள், அந்த விளக்கு “பண்டைய காலம் தொட்டே” உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்டு வருவதாக சாட்சியம் அளித்திருந்தனர். தீபத்தை வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்ற இந்து முன்னணியின் கோரிக்கை தொடர்பாக ஒரு பெரும் சர்ச்சை நிலவிய பின்னணியில், பட்டர்கள் இந்தத் தகவலை கோயில் அதிகாரிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
தி டெலிகிராப்:
*நபர்கள், ஜாதி அல்லது மதத்தின் பெயரால் கிராமங்களுக்குப் பெயரிட மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
– குடந்தை கருணா
