நாகர்கோவில், டிச. 26- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் நூல்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.
மாவட்டக் கழகச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் நூல்களை அறிமுகம் செய்து சிறப்புரை யாற்றினார். கழகக் காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.இராஜசேகர் மா.மணி, பெரியாருடைய பெருந் தொண்டர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச்செயலாளர் அய்சக் நியூட்டன் மகளிரணித் தலைவர் இந்திராமணி தோவாளை ஒன்றியத் தலைவர், மா.ஆறுமுகம் இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், மாநகர செயலாளர் ச.ச. கருணாநிதி, கன்னியாகுமரி நகர அமைப்பாளர் க.யுவான்ஸ், பகுதி தலைவர் ச.ச மணிமேகலை, கழகத் தோழர்கள் செல்லையன், கூடங்குளம் பாலகிருஷ்னன், ந.தமிழ்அரசன், பொன் பாண்டியன், திராவிட நட்புக்கழக பொறுப்பாளர், விஷ்ணு மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
