ஜெயங்கொண்டம், டிச. 26- சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை வாழ்வாக்கிய தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2025) ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளியில் மரியாதையுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நாளை முன்னிட்டு பள்ளி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் ஜெயங் கொண்டம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பெரியார் பள்ளி யில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்றைய தலைமுறைக்கும் வழி காட்டியாகத் திகழ்வதை நினைவு கூர்ந்து, அவரது கொள்கைகளை வாழ்க் கையில் நடைமுறைப் படுத்துவோம் என உறுதி மொழி எடுத்தனர்.
