இராணிப்பேட்டை, டிச. 26- இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.12.2026 அன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் தலைமையில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் சு.லோக நாதன், மாவட்டச் செயலாளர் செ.கோபி,காப்பாளர் சொ.சீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் கோ.சூர்யகுமார், பெரியார் பெருந்தொண்டர் சின்ன துரை, மாவட்ட ப.க.துணைத்தலைவர் போ.பாண்டுரெங்கன், மாவட்ட ப.க.செயலாளர் ந.இராமு, ஒன்றியத் தலைவர் ஆதம்பாக்கம் ப.இராவணன், கிருபாகரன், தேவராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கன்னியப்பன், மதிமுக ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் .
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் சிறப்பாக உரையாற்றினார். பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய மாவட்ட ப.க. துணைத் தலைவர் காவேரிப்பாக்கம் போ. பாண்டுரங்கன் அவர்களுக்கும் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட எஸ்.தேவராசனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
புதிய பொறுப்பாளர்களை மாவட்டத்தலைவர் சு.லோகநாதன் அறிவித்தார்.
மாவட்ட ப.க. அமைப்பாளர் சம்பத் ராயன் பேட்டை கெ.ஆறுமுகம் வாலாஜா ஒன்றிய திமுக அமைப்பாளர் எஸ் தேவராசன் காவேரிப்பாக்கம் ஒன்றிய திமுக துணைத்தலைவர் கி.கிருபாகரன் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் லோ அறிவுமணி செயலாளர் ஆ தென்னரசி.
தீர்மானங்கள்:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 93ஆவது பிறந்தநாள் வாழ்த்தினை இக்கூட்டம் தெரி வித்துக் கொள்கிறது.
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகளைசெயலாக்குவதுஎனமுடிவுசெய்யப்படுகிறது.-
ரூபாய் பத்து லட்சம்
நிதி வழங்க…
தமிழர் தலைவர் அவர்களின் இலட்சியத் திட்டமான பெரியார் உலகத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிதி திரட்டி ராணிப்பேட்டையில் வழங்குவது என முடிவு செய்யப் படுகிறது.
ஒன்றியம் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
வாலாஜா ஒன்றியஅமைப்பாளர் எஸ்.தேவராசன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
