திருவண்ணாமலை, டிச. 26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி சூர்யா சம்பந்தம் (வயது 80) உடல்நலக் குறைவால் 25.12.2025 அன்று நண்பகலில் திரு வண்ணாமலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்..
செய்தியறிந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
மாலை 6 மணியளவில் அம்மையாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கழகத் தலைவர் ஆசிரியர் மின் மயானத்திற்குச் சென்று உடல் எரியூட்டப்படும் வரை இருந்து மரியாதை செலுத்தினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தி.மு.க.மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சு.ராஜாங்கம், வழக்குரைஞர் கண்ணதாசன், இரா.சிறீதரன், எஸ்.பன்னீர்செல்வம், பா.கார்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், டி.வி.எம்.நேரு, ஏ.ஏ,ஆறுமுகம், சா.ரகுநாத், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் குணா என்ற குணாளன், கிரிக்கெட் கே.ரவி, சி.பி.அய். தங்கராஜ், இரா.திருமலை, வி.சி.க.நியூட்டன், ம.தி.மு.க.சீனி.கார்த்திகேயன், சி.பி.எம்.வீரபத்திரன், சிவக்குமார், செல்வம், காங்கிரஸ் கமிட்டி வெற்றிச்செல்வன், மக்கள் நீதிமய்யம் இரா.அருள் மற்றும் தோழமைக் கட்சியினர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், ஒருங்ணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, சேலம் வீரமணி ராஜூ, வேட்டவலம் பட்டாபிராமன், ப.அண்ணாதாசன், முனு.ஜானகிராமன், மு.காமராஜ், கு.பஞ்சாட்சரம், இரா.கிருட்டிணன் வேலூர் கு.இளங்கோவன், வி.இ.சிவக்குமார், லதா, திராவிடன் நிதி தலைவர் ப.சீதாராமன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், கோ.தேவராஜ், வி.சடகோபன், கோ.திராவிடமணி, சேத்பத் நாகராசன், திராவிடச்செல்வன் உள்ளிட்ட கழகப் பொறுப்பா ளர்கள், தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
அம்மையாரின் மகன் இராஜராஜன், மருமகள் தமிழ்ச் செல்வி ஆகியோருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் தமது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி சூரியகுமாரி அம்மையார் (வயது 80) உடல் நலக்குறைவால் மறைவுற்றார். கழகத் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த அம்மையாரின் மகன் இராஜராஜன் அவர்களுககு தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார். உடன் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தி.மு.க.மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் கழக பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் (திருவண்ணாமலை, 25.12.2025)
