சென்னை, டிச. 26- உயர்நீதிமன்றத்தில் திருவண்ணா மலையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘உயநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம், வழக்குரைஞர்கள் எம். கருணாநிதி, ராஜேஷ் விவே கானந்தன், இ.மனோகரன், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்கு மார், எஸ்.ரவிக்குமார், சி. ஐயப்பராஜ், என்.திலீப்கு மார், ஏ.எட்வின் பிரபாகர், கே.கோவிந்தராஜன், எம். கார்த்திகேயன், ரஜ்னீஷ் பத் தியால், ஆர்.அனிதா ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்து உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.நிஷா பானு, கேரளா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட போதிலும் அவர் பதவி ஏற்காமல் விடுப்பில் இருந்தால் கொலீஜியத்தில் அவர்தான் 3ஆவது இடத்தில் இருந்து வந்தார். ஆனால், அவருக்கு பதில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கொலீஜியத்தில் இடம் பெற்று, இந்த பரிந்துரையை செய்துள்ளார்.
எனவே, இந்த கொலீஜியமே தவறாக அமைக்கப்பட்டு சட்டத்துக்கு புறம்பாக பரிந்துரை செய்துள்ளது. அது மட்டுமல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ள 13 வழக்குரைஞர்களுமே ஒன்றியத்தில் ஆளும் கட்சியில் தொடர்புடையவர்களாக உள்ளனர். அரசியல் பின்னணி இல்லாதவர்களை நியமித்தால்தான், நீதித்துறை சுதந்திரமாக இயங்கும். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு அனைத்து பிரிவினருக் கும்வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, இந்த 13 வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ததை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியிம் தலைமையிலான டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வருகிறது.
