ப்ரெசிடெண்ட் ஆக முடியாது. கவுன்சிலர் ஆக முடியாது. ஏன் ஒரு வார்டு மெம்பெர் கூட ஆக முடியாது. இதெல்லாம் நன்கு தெரிந்தும் பெரியாரியக் கொள்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சுயநலமில்லாமல் பொது நல நோக்கோடு களமாடி வரும் திராவிடர் கழகத் தோழர்களை நினைத்தால் உண்மையாகவே பெரும் பெருமையாக உள்ளது.
பாராட்டுக்கள் தோழர்களே… இந்த நேரத்தில் ஒன்று நினைவிற்கு வருகிறது. தேர்தல் அரசியல் கிடையாது. இயக்க அரசியல் மட்டுமே என இன்றைய பெரிய அரசியல் கட்சிகள் முடிவெடுத்தால் எத்தனை தொண்டர்கள் கட்சியில் நீடிப்பர்கள் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. திராவிடர் கழகத்தைப் போல இத்தனைக் காலங்கள் அவை தாக்குப் பிடிக்குமா என்பதும் சந்தேகமே!
உங்களை உயிர்ப்போடு களமாடச் செய்யும் ஆசிரியரும் ஒரு மிகப் பெரும் காரணம்.. இத்தகைய பெருமை கொண்ட தோழர்களுடன் நட்புப் பாராட்டுவதில் உண்மையாகவே பெருமிதம் கொள்கிறேன்..
– உமாபதி நித்யா (முகநூல் பதிவு)