ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கே.எஸ். சுதர்சன் சொல்கிறார்
(ஆர்.எஸ்.எஸ். தலைவர்)

“பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத்தினார்.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குப்பன்ன ஹள்ளி சுதர்சன் ஆற்றிய உரை விவரம்.

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அன்னிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படையெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட வேண்டும்? பாபருடைய கல்லறைக் கருத்துகளை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே முஸ்லிம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென ‘சுபியிசத்தை’ வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்

இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹுசைன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அனைத்து மதங்களும் சமமானதல்ல என்று வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள (கத்தோலிக்க மிஷினரிகளை) கிறிஸ்தவ அமைப்புகளை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதமாற்றம் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை யிடத்தின் கருத்துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துக்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன.”

(‘தினமணி’ 16.10.2000)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *