டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்வதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் களைப் பரப்பி வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு,
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜாதிப் பஞ்சாயத்து, அடுத்த மாதம் முதல் பெண்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் போராட்டங்களை தூண்டியுள்ளது.
தி டெலிகிராப்
* தொழிலாளர் சட்டங்கள் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுத் திட்டப் பணியாளர்களை நலத்திட்டப் பலன்களிலிருந்து விலக்குகின்றன. புதிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களையும் பாதுகாப்பதாகக் கூறப் பட்ட போதிலும், கவுரவப் பணியாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட லட்சக்கணக்கானோர் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்கு வெளியே உள்ளனர்.
– குடந்தை கருணா
