வள்ளியூர், டிச. 24- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் அவர்களின் இணையர் பாக்கியலட்சுமி அம்மையார் (வயது 70) 21.12.2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் 22.12.2025 அன்று காலை 11 மணியளவில் எவ்வித மூடச்சடங்குகளும் இன்றி பகுத்தறிவு முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைவர்கள் ஆறுதல்
அம்மையாரின் மறைவுச் செய்தியறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகி யோர் அலைபேசி வாயிலாக
ந. குணசீலனைத் தொடர்புகொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
இறுதி மரியாதை மற்றும் இரங்கல் கூட்டம்
செய்தி அறிந்ததும் கழக ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், நெல்லை மாவட்டத் தலைவர் ச. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
நல்லடக்க நிகழ்வின் போது, மாவட்டத் தலைவர் ச. இராசேந் திரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில்: மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன், பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் வெள்ளைப் பாண்டி, செயலாளர் சத்யன், தி.மு.க. பிரமுகர்கள் நைனார், சிவ நம்பி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் எம்.எம். சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், குடும்ப உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மருமகன்கள் சிறீராம், சிங்காரவேலன், ஆகியோர் உரையாற்றிய பின், உணர்ச்சிமிகு வீரவணக்க முழக்கங்களுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பங்கேற்பாளர்கள்
இந்நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் நெல்லை காசி, மாவட் டத் துணைத் தலைவர் மகேஷ், சந்திப்பு நடராஜன், வள்ளியூர் ரமேஷ், வழக்குரைஞர் சவுமியா, மாவட்ட ப.க. தலைவர் சந்திரசேகர், நகரச் செயலாளர் நம்பிராஜன், மோகனசுந்தரம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் திரளாகப் பங்கேற்று இறுதி மரியாதை செலுத் தினார்கள். முழு நிகழ்வுகளையும் வள்ளியூர் நகரச் செயலாளர் நம்பிராஜன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் வெள்ளைப் பாண்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
