
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய சுயமரி யாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025, 20-12-2025 அன்று மாலை 6.30 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு, பகுத்தறிவு கலைத்துறையின் புதுச்சேரி அமைப்பாளர் புதுவைப் பிரபா தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் நெ. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் மாநில துணை செயலாளர் வி. இளவரசி சங்கர் நோக்க உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் முன்னிலை உரையாற்றினார். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மாநிலத் தலைவர் சிவ. வீரமணியும், பகுத்தறிவாளர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் இரா. முத்து கணேசும் வாழ்த்துரை வழங்கினர்.
பகுத்தறிவு மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த குறும்படங்கள் திரையிடப்பட்ட இவ்விழாவில், பகுத்தறிவு தொடர்பான பாடல்கள், நடனம், நாடகம், நகைச்சுவை, தனி நடிப்பு போன்ற கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
பகுத்தறிவு கலைத் துறையின் மாநிலச் செயலாளர் (தமிழ்நாடு), திரைப்பட இயக்குநர் மாரி கருணாநிதி சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு, குறும் படக் கலைஞர்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழையும் நினைவுப் பரிசினையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிறைவாக விழாவில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மு. குப்புசாமி நன்றி யுரை ஆற்றினார். ஜெ.வாசுகி பாலமுருகன் நிகழ்ச்சி யினை நெறியாள்கை செய்தார்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் திரளான பொது மக்களும், கவிஞர்களும், கலைஞர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
