23.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முனைவர் குமார் ராஜேந்திரன் சந்தித்து, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளின் நினைவாக தான் தொகுத்து எழுதியுள்ள கீழ்க்காணும் மூன்று நூல்களை வழங்கினார். எழுத்தாளர் மணா அவர்களும் உடன் இருந்தார்.
நூல்கள் விவரம்
- பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
- ஜானகி ராமச்சந்திரன் (கும்பகோணம் முதல் கோட்டை வரை)
- எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்.
குறிப்பு: மேற்கண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.
மிக்க நன்றி!
– நூலகர்
