தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச்சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரி மானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து ‘சி’ மற்றும் டையூரிடிக் பண்பு கள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவை யற்ற கொழுப்பு கரையும். ஆரோக்கியத்து டன் நீண்ட காலம் வாழ்வதற்கு, உடல் எடையை சரியாக பராமரிப்பது முக்கியம். எடையைக் குறைக்க முயற்சிக்கும் பெண் கள் பலர், சத்துள்ள உணவுகளைச் சாப் பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது என்று உணவு முறையை மாற்றி அமைத்து பின்பற்றுவார்கள். இவற்றுடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதும், தேவை யான அளவு தண்ணீர் குடிப்பதும் உடல் எடைக் குறைப்பில் அவசியமானது. இதைத் தவிர்க்கும்போது எடையைக் குறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்காது. பொதுவாக நம் உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற் படக்கூடும். உணவு உண்பதற்கு 30 நிமிடத் திற்கு முன்னும், சாப்பிட்டு 30 நிமிடம் கழித்தும் தண்ணீர் குடிப்பது, செரிமானம் சீராக நடைபெறுவதற்கு உதவும். உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை எரிக்கவும், சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உடல் சரியான முறையில் உறிஞ்சவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடையும் சீராகக் குறையும்
சர்க்கரை சேர்த்த பானங்கள் அதிக கலோரிகளைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பெண்கள் உள்பட எல்லோரும் பழச்சாறு, தேநீர், பச்சைத் தேயிலை தேநீர் போன்ற வற்றை சர்க்கரை சேர்க்காமல் பருகலாம். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப் பிடுவது உடல் எடை குறைப்பதற்கு உதவு வதோடு, கெட்டக் கொழுப்பு அதி கரிக்கும் அபாயத்தையும் குறைக்கும்.
பெண்கள் குறைந்த கலோரிகளைக் கொண்ட மாதுளம்பழச் சாற்றை தினமும் குடிப்பது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. தர் பூசணி பழத் தில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், அவ்வப்போது சாப்பிடுவது உடலை சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவும். தினமும் இரண்டு கப் தர்பூசணி சாப்பிடுவது மன நிறைவை அதிகரிக்கச் செய்யும். இது உடல் எடை, பி.எம்.அய். மற்றும் ரத்த அழுத் தத்தைக் குறைக்கும். கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந் துள்ளதால், அதை சாலட் அல்லது சாறாகப் பருகுவதால் உடல் எடை எளிதாகக் குறையும். ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசிப் பழம், ஆரஞ்சு, கிவி போன்ற வற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஆரோக்கியமாக எடையைக் குறைக்கலாம்.