சென்னை, டிச. 23- நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்காகப் பயன் படுத்தப்படும் 205 மருந்துகள் தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த மாதம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனையின் முடிவில் 205 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களில் தோல்வியடைந்து ‘தரமற்றவை’ என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
2 மருந்துகள்: முற்றிலும் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தரமற்ற மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்த நிறுவ னங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் மருந்தகங்கள் விழிப்புடன் இருக்கும் வகையில், தரம் குறைந்த மருந்துகளின் முழுப் பட்டியலை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
முக்கிய குறிப்பு: உங்கள் மருந்துகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
