எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டு தமிழர் தலைவர் வாழ்த்துரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.23- எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிப் பிரிவுத் தலைவரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன், “தீரர்கள் கோட்டம் தி.மு.க.”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”, “முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்” ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார்.

இந்நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (22.12.2025) மாலை 6 மணியளவில் சென்னை – கோட்டூர்புரம் – பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இந்நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்நூல்கள் குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இந்நூல்கள் குறித்து அறிமுக உரையை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் ப.திருமாவேலன் ஏற்புரையாற்றினார்.

நிறைவாக இந்நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு தலைமை யேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் இயக்குநர் பெல்.கு.ராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்கே.பன்னிர்செல்வம், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், முனைவர் கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கனிமொழி சோமு, அருண்நேரு மற்றும் முனைவர் க.பொன்முடி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், துணைமேயர் மு.மகேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர். எஸ்.பாரதி, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், இயக்குநர் அமிர்தம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டு விசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், சென்னை மாநில கல்லூரி முதல்வர் ராமன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டக் கழக தலைவர் இரா.முத்தையன், சு.மோகன்ராஜ், முனைவர் அன்பழகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், உடுமலை வடிவேல், கலைமணி மற்றும் திரளான சான்றோர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *