தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24.12.2025 புதன்கிழமை காலை 08.30 மணி -அன்னை சிவகாமி நகர் பெரியார் சிலை, 09.00 மணி- புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை, 09.15 மணி – பூபதி நினைவு பெரியார் படிப்பகம் பெரியார் சிலை, 09.30 மணி- பழையபேருந்து நிலையம் பெரியார் சிலை.
மேற்கண்ட இடங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்க உள்ளதால் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்: தஞ்சை மாநகர திராவிடர் கழகம்
– – – – –
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் 24.12.2025, நினைவை போற்றும் வகையில் கல்லக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதன் கிழமை காலை 9:00 மணிக்கு மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில், மாநில கழக மருத்துவரணி செயளாலர் கோ.சா.குமார், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், பெ.செயராமன் மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர், சி.முருகன் மாவட்ட ப.க அமைப்பாளர் ஆகியோர் முன்னிலையில் கழக தோழர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து சிறப்பு செய்யவுள்ளதால் கழகத் தோழர்கள் அனைவரும் சரியான நேரத்துக்கு வந்து கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம். அழைப்பு: கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க.
