திருப்பத்தூர், டிச. 22- திருப்பத்தூர் மேனாள் கழகத் தலைவர் பெரியாரின் பெருந்தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்த சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட கழகச் சார்பில் 21.12.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.
இந் நிகழ்வு கே. சி. எழிலரசன் (மாவட்டத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது. பெ. கலைவாணன் (மாவட் டச் செயலாளர்) அனை வரையும் வரவேற்றார். அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்) எம். ஞானப் பிரகாசம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) மாலை அணிவித்தனர். தோழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் வ. புரட்சி (விடுதலை வாசகர் வட்ட மாவட்டச் செயலாளர்) வே. அன்பு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) சி.ஏ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) தோழர் காளிதாஸ் (நகரதலைவர்) ஏ. டி. சித்தார்த்தன் (மாவட்ட துணைச்செயலாளர்), நா.சுப்புலட்சுமி ஏ.டி.இந்திர ஜித் (நகரசெயலாளர்), க.மோகன் (மாவட்ட செய லாளர் தொழிலாளரணி) அ. மணிமொழி (மகளிர் பாசறை) நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலா ளர்) லட்சுமணன் (லக்கி நாயக்கன்பட்டி ஒன்றிய செயலாளர்) க.முருகன் (நகர இளைஞரணி துணை செயலாளர்) மற்றும் அய்யா அவர்களின் உற வினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
ஏ.டி.கோபால் அவர் களின் நினைவை போற் றும் விதமாக ஏ.டி.ஜி. தேநீர் கடையில் ஒரு தேநீர் ரூ.5.00க்கு பொது மக்களுக்கு வழங் கப்பட்டது.
