ஆவடி, டிச. 22- தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழக சார்பில் எண் 2 / 186 திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜமீன் கொரட்டூரில் உள்ள கார்த்தி இல்லத்தில் புதிய கிளைக் கழக துவக்க விழா 21-12-2025 அன்று காலை 09-30 மணிக்கு கழகக் கொடியை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் ஏற்றி வைக்க தந்தை பெரியார் படத்திற்கு துணைத் தலைவர் மு.ரகுபதியும், புரட்சியாளர் டாக் டர் அம்பேத்கர் படத்திற்கு மாவட்ட செயலாளர் க.இளவரசனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செ.அன்புச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க. கார்த்திக் கேயன், துணைத் தலைவர் சீ.ஜெயராமன், திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை, அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், பெரியார் பிஞ்சு இனியன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணைத்தலைவர் இரா.கலைவேந்தன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் ம.சிலம்பரசன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், அயப்பாக்கம் அரிகிருட்டிணன், ஆவடி நகர கழக செயலா ளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் சுகந்தி, க.ஜெகதீஷ், பு.மணி கண்டன்,பெரியார் பிஞ்சு கள் தருண், நன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக திருமழிசை கார்த்திக் நன்றி கூறினார்.
