தூத்துக்குடி, டிச. 22- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 46ஆவது நிகழ்ச்சி தமிழர் தலைவர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா – நூல் அறிமுக விழவாக நடை பெற்றது.
13.12.2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.முரு கன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடக்கவுரையாக “அய்யாவின் அடிச் சுவட்டில் தமிழர் தலை வரின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் பேசினார்.
அடுத்து, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “பெரியாரின் மனிதநேயம்” என்ற நூலினை அறி முகம் செய்து கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம் உரையாற்றினார்.
இறுதியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செ.செல்லத்துரை நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கி.கோபால்சாமி, செ.ஜெயவீரதேவன், மதுசேகர், வீரப்பன் மற்றும் பலர் வருகை தந்தார்கள்.
