வட இந்தியாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் மரியா முகேஷ் கண்ணன் தலைமையில், வழக்குரைஞர் பரந்தன்யா பேஹேக் (உச்சநீதிமன்றம்), முனைவர் சங்கர் நாயிக், ஆய்வு மாணவி தீபிகா சிங், ஆய்வு மாணவி நீரஜ் ராஜசிறீ, கணித ஆசிரியர் ரூபேஷ் படேல் ஆகியோர் தந்தை பெரியாரின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். அய்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆர்வத் துடன் கேட்டறிந்தனர். கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினர்.
