மறைவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கல்லக்குறிச்சி நல்லாசிரியர் நல்.ராமலிங்கம் (21.12.2025) மறைவிற்கு மாநில கழக மருத்துவர் கழகச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். உடன் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைச் செயளாலர் பா.முத்து, மாவட்ட இளைஞரணி செயளாலர் கி.முத்துவேல், மாவட்ட கழகத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க. இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன், மேலூர் கழக தலைவர் பழனிமுத்து, சிறுவங்கூர் கழகத் தலைவர் தேவராசு, உலகியநல்லூர் கழகத் தோழர் ராஜேந்திரன் மற்றும் கழக தோழர்களுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

  • • • • •
  • மறைவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் இரா.தமிழரசன் (வயது 58) 21.12.2025ஞாயிறு காலை 5.30 மணிக்கு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக தோழர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன், மாவட்டகாப்பாளர்கள் சி.காமராஜ், சு.மணிவண்ணன், மாநில ப.க அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்  இரா திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் க. கார்த்திக், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு அறிவன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தின ராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், தமிழர் நீதி கட்சி தலைவர்  சுபா.இளவரசன்  ஊர்வலமாக சென்று மலர் மாலை வைத்து மறைந்த தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்தினர். அவரது உடலுக்கு இறுதி மரியாதை 21.12.2025 மாலை 6 மணியளவில் சிலம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.  மறைந்த தமிழரசன் தந்தை பெரியார் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துவதில் உறுதி கொண்டவர். தன்னுடைய ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் சைக்கிளில் செல்வதற்கும், பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கும் போராடி உரிமைகளை பெற்றுத்தந்தவர் மூடநம்பிக்கை  ஒழிப்பு ஊர்வலத்தை சின்னஞ்சிறிய கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பாக நடத்தியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

  • • • • •

மறைவு

பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலனின் வாழ்விணையர் கு.பாக்கியலட்சுமி (வயது 70) இன்று (22.12.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையார் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்தவர். இணையர் ந.குணசீலனின் இயக்கப் பணிகளுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். நம்பி நாராயணன் என்ற மகனும், சங்கீதா, கோமளா ஆகிய மகள்களும் அவருக்கு உள்ளனர். நெல்லை மாவட்டக் கழக, வள்ளியர் நகரக் கழக சார்பில் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நாளை (23.12.2025) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வு வள்ளியூரில் நடைபெறுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *