ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

1 Min Read

மகளிர் அரங்கம்

இரவு நேர பயணத்தின் போது சால்வை, சார்ஜர், சானிட் டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியா வசியப் பொருட்களை மறக்கா மல் கைவசம் வைத்துக்கொள் ளுங்கள். ரயில் பயணம் பலருக் கும் பிடித்தமான விஷயம். தற் போது பல்வேறு காரணங்களால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரயிலில் தனியாக பயணிக்கிறார்கள். அப்போது தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாக்கும் வகை யில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது. அதற்கான ஆலோ சனைகள் இங்கே ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டு பதிவு செய்யும்போதே பெண்களுக்கான தனி இருக்கைகளைப் பெறு வதில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு முடியாத சூழலில் பயணம் செய்ய நேரிட்டாலும் முடிந்த அளவிற்கு பெண்கள் இருக்கைகள் இருக்கும் பகு தியை தேர்ந்தெடுங்கள். இரவுப் பயணங்களில் ‘ஸ்லீப்பர்’ முன் பதிவு செய்கிறீர்கள் என்றால், பயணச்சீட்டு பதிவில் கூடுமான வரை ‘அப்பர்பர்த்’ எனப்படும் மேலே இருக்கும் படுக்கையைத் தேர்வு செய்வது நல்லது. 

இது பெண்களுக்கு பல வகைகளில் வசதியா கவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தனியாக பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இல்லாமல் பயணச்சீட்டு ஆய்வாளர் அல்லது ரயிலில் ரோந்து வரும் காவல்துறையினரிடம் தெரிவியுங் கள். பயணத்தின்போது உங்களுக்குத் தேவை யான தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள். ஏனெ னில், பலருக்கு ரயிலில் வாங்கி சாப்பிடும் உணவு அசவுகரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ரயில் பயணம் மட்டுமில்லாமல், எந்தப் பயண மாக இருந்தாலும் விலை உயர்ந்த நகைகள், அதிக பணம் வைத்திருப்பதைத் தவிருங்கள். மற்றவர்கள் முன்பு உங்கள் பையை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்ப்பது நல்லது. ரயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவ தைத் தவிர்க்கலாம். அவ்வாறு பேச வேண்டிய தேவை வந்தாலும், உங்களைப் பற்றிய தகவல் களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வ தைத் தவிர்க்க வேண்டும். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *