சென்னை, டிச. 21– மகளிருக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு உதவி வரும் இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமாகிய அவதார் குழுமம், தனது வெள்ளி விழாவை 18.12.2025 அன்று சென்னை சவேரா அரங்கில் இந்நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் தலைமையில் கொண்டாடியது.
2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறுக்குப் பின் மீண்டும் பணியில் சேர உதவியுள்ளதுடன், 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உண்மையான உள்ளடக்கத்தை நோக்கி வழி காட்டியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் நிறுவப்பட்டபோது, அதிகப் பெண்களுக்குத் தங்கள் பணியைத் தொடங்க உதவுவதே அதன் எளிமையான நோக்கமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், பாரபட்சங்களை நீக்குவதற்காக அமைப்புகளின் முழுமையான மறு வடிவமைப்பு, எண்ணற்ற கூட்டாண்மைகள், அளவீடுகள், ஆராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மிகவும் பெரிதான ஒன்றாக இந்த நோக்கம் வளர்ந்தது என டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில், சிறப்பான பணி வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மகப்பேறுக்குப் பின் இரண்டாவது பணியில் சிறப்பாகப் பணிபுரியும் பெண்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
