21.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கத் துடிக்கிறார்கள் பாஜகவின் சதித் திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: திமுக தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது. நெல்லை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.
* ஹிந்தித் திணிப்பை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* புதிய நூறு நாள் வேலைத் திட்டம் ஏழைகளுக்கு எதிரானது, காங்கிரஸ் போராட்டம்.
* ‘‘100 நாள் வேலைத் திட்டத்தை புல்டோசரால் இடித்து தள்ளியது மோடி அரசு’’ காங்கிரசார் போராட வேண்டும்: சோனியா காந்தி அழைப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ட்ரம்ப்புடன் ‘அமைதி’யை மீட்டெடுக்கவே அணுசக்தி மசோதா நிறைவேற்றம்: ஒரு காலத்தில் தனது நண்பராக இருந்தவருடன் சாந்தியை மீட்டெடுக்கவே இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘சாந்தி’ சட்டத்தை ட்ரம்ப் சட்டம் என்றும் அழைக்கலாம். அதாவது, உலை பயன்பாடு மற்றும் மேலாண்மை வாக்குறுதி சட்டம் (TRUMP ACT – THE REACTOR USE AND MANAGEMENT PROMISE ACT)’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சிகள் ஆளும் நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள், (கருநாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்கள்) விபி-ஜி ராம் ஜி மசோதா கிராமப்புறத் துயரத்தை ஆழப்படுத்தும் என்றும், பசி மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்கு எதிரான கடைசி பாதுகாப்பு அரணை பலவீனப்படுத்தும் என்றும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர்ஜாதியினரின் குடும்பப் பெயர்களை பார்த்து மக்கள் அவர்களுக்கு எப்படிப் பார பட்சம் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப் பீர்கள் — இந்த ஜாதிவெறி, இந்த ஜாதிய மனப் பான்மை நமக்குத் தேவையானது. நாம் நம் மக்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.” என மற்றும் ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி மீனாட்சி சிங் பேச்சு. முன்னர் பார்ப்பனர்களுக்கு எதிராக அய்.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ் வர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.
– குடந்தை கருணா
