சென்னை, ஏப்.29- ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைப் பணிகள் முடிக் கப்பட்டுள்ளன.
சென்னையில் பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்ட மைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 மற்றும் மாநகராட்சி மூலதன நிதி மற்றும் வெளி ஆதா ரத் திட்டங்கள் மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.150.91 கோடி மதிப் பீட்டில் 1,658 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.
இதில் ரூ.47.42 கோடி மதிப்பீட்டில் 521 உட் புறச் சாலைகள் அமைக் கும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. ரூ.31.13 கோடி மதிப்பீட்டில் 342 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.72.36 கோடி மதிப்பீட்டில் 795 உட்புறச் சாலைகள் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. மேலும், ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் 58 பேருந்து தட சாலைகள் அமைக் கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதில், ரூ.8.52 கோடி மதிப்பீட் டில் 16 சாலைகள் அமைக் கும் பணி முடிவடைந்துள் ளது. ரூ.12.79 கோடி மதிப் பீட்டில் 12 சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ரூ.28.01 கோடி மதிப் பீட்டில் 30 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப் பட உள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.