சென்னை, டிச.20 சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் அய்ந்து பிரதான ஏரிகளிலும் நீர் இருப்பு அதன் மொத்த கொள்ளளவில் 95.12 சதவிகிதத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் நீர்வரத்து காரணமாக ஏரிகள் தற்போது முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி (TMC) ஆகும். தற்போதைய நிலவரப்படி, இந்த ஏரிகளில் 11.183 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.
குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய மூன்று பிரதான ஏரிகள் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
