திருச்சி, டிச. 20- இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சைலேந்திர சவுலா மனைவி நிஷா சவுலா (60). இவர், தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார்.
இந்நிலையில் சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இருவரும் சென்றனர். 18.12.2025 அன்று காலை ரங்கா ரங்கா ராஜகோபுரம் அருகே நடந்து சென்ற போது நிஷா சவுலா திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அவரது சகோதரர் மீட்டு சிறீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே நிஷா சவுலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
