மதுரை சவுராஷ்ட்ரக் கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவரும், பேராசிரியரும் சவுராஷ்ட்ர மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய வருமான பேராசிரியர் பு.மு. சாந்தமூர்த்தி 11.12.2025 அன்று தமது 87ஆம் வயதில் காலமானார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேராசிரியர் சாந்த மூர்த்தி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி, தலைவர் அவர்களின் அன்பைப் பெற்றவர்.
மதுரை தோழர் மோதிலால் இல்ல மணவிழாக்களில் கலந்து கொண்ட இன உணர்வுமிக்க பெரியார் கொள்கைப் பற்றாளர் மறைந்த பேராசிரியர் இல்லத்திற்கு சென்று அவரின் உற்ற தோழர் மோதிலால், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ்.மாவட்டத் துணை தலைவர் இரா.திருப்பதி ஆகியோர் மாலை வைத்து மரியாதையும், இரங்கலும் தெரிவித்தனர்.
