19.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: ஒரே நாளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொன்று விட்டது மோடி அரசு – ராகுல் காட்டம்.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்அய்ஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் அதிர்ச்சி; பெயர் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்.
* யு.ஜி.சி. போன்ற அமைப்புகளை கலைத்து விட்டு ‘விக்சித் பாரத் சிக்ஷா அபிஸ்தான்’ என்ற அமைப்பை மோடி அரசு உருவாக்குவது, கல்வியை வணிகமயமாக்கும் செயல் என அகில இந்திய மாணவர் அமைப்பு எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக காந்தியின் பெயரை நீக்கி விபி ஜி ராம் ஜி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதா மாநிலங்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மக்களவையில் நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு.
* தெலங்கானா கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் 45 சதவீத இடங்களுக்கு மேல் பிற்படுத்தப்பட்டோர் வெற்றி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நவீன இந்தியாவை உருவாக்கிய 3 பேரை அவமதிப்பதே பிரதமர் மோடியின் உத்தி’, குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் கண்டனம்.
தி இந்து:
* கார்த்திகை தீபம்: கிறிஸ்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள கிராமத்தில் விழா நடத்த அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை
தி டெலிகிராப்:
* பிரதமர் மோடிக்கு ‘கடுமையான ‘A.C.R.O.N.Y.M நோய்’ உள்ளது, அதாவது ‘A.C.R.O.N.Y.M அமைச்சர் துறை — பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையம் — புதியது ஆனால் அர்த்தமற்றது’ ராம்-ஜி மசோதா ‘வடிவமைப்பிலேயே ஏழைகளுக்கு எதிரானது’ என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒரு ஊழியரின் ஜாதி நிலையை சரிபார்க்க முதலாளிக்கு அதிகாரம் இல்லை என்றும், அத்தகைய அதிகாரங்கள் மாவட்ட ஜாதி சரிபார்ப்புக் குழுவிடம் மட்டுமே உள்ளன என்றும் கருநாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
– குடந்தை கருணா
