கோவை, டிச. 20- கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சிந்து – திராவிட நாகரிகத்தை “சரசுவதி நாகரிகம்” என திரிக்கும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், இந்நிகழ்விற்கு வருகை தரும் ஆர்எஸ்எஸ்.ரவியை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் வட கோவை பவர் ஹவுஸ் அருகில் 19.12.2025 அன்று தோழர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது,
திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் மா சந்திரசேகர், மாவட்ட காப்பாளர் பழ அன்பரசு, கோவை மாநகர தலைவர் தி.க செந்தில்நாதன், மாநகர செயலாளர் க.வீரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ப. கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் ச. திலகமணி, பீளமேடு பகுதி கழக தலைவர் ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ராசா, கணபதி பகுதி தலைவர் கவி கிருஷ்ணன், பகுதி செயலாளர் திராவிடமணி, வடவள்ளி பகுதி கழக தலைவர் இராஜசேகரன், மற்றும் முத்துகணேசன், லூகாஸ் பீட்டர், ஆனைகட்டி சம்பத், பொள்ளாச்சி இளைஞரணி தலைவர் ம.பிரவீண், கணேசன், சிவகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் த பெ தி க, கம்யூனிஸ்டு கட்சிகள் விசிக, தி.இ.த.பே, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், தமிழ்ப் புலிகள் கட்சி, த.மு.எ.க.ச, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட ஏராளமான முற்போக்கு அமைப்பின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
