சுயமரியாதை நாள் விழா – பொதுக்கூட்டம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, டிச. 20– தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் (டிசம்பர் 2 சுயமரியாதை நாள்) பொதுக்கூட்டம்.

13-12-2025 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது,

இந்நிகழ்வில் தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்,

மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றியத்தலைவர் இரா.சேகர், தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.இராமலிங்கம், புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி. கலைச் செல்வன், கரந்தை பகுதித் தலைவர் வெ. விஜயன், மருத்துவக் கல்லூரி பகுதித் தலைவர் த.கோவிந்தராசு, புதிய பேருந்து நிலைய பகுதிச் செயலாளர் வெ.துரை, கரந்தை பகுதிச் செயலாளர் ம.தனபால் ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.

தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்ய னார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி,காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவரும்-தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவருமான பி.ஜி.இராஜேந்திரன், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வரகூர் காமராஜ், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.பி.நாத்திகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இடிமுரசு இலக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக சிறப்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி தனது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொதுவாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் பெரியார் கொள்கையினை “பெரியார் உலகமயம்- உலகம் பெரியார் மயம் ” என்ற கொள்கையின் அடிப்படையில் கொண்டு சென்று எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பரப்புரை செய்தார் எனவும், மேலும் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்த வந்த நேரத்தில் அதை பாதுகாக்க 31 சி என்ற சட்டத்தை உருவாக்கி அதனை 9 ஆவது அட்டவணையில் இணைத்து பாதுகாத்த பெருமை தமிழர் தலைவரையே சேரும் என்றும், மேலும் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி மிகச்சிறப்பாக உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற து.செயலாளர் முனைவர் ந.எழிலரசன், சித்திரக்குடி பழனிராசன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட மகளிரணித்தலைவர் அ. கலைச்செல்வி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் வெ.நாராயணசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அன் பழகன், மாவட்ட இளைஞரணி து.செயலாளர் அண்ணா.மாதவன், மாவட்ட ப.க. இணைச்செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை. கவுதமன், மாவட்ட வழக்குரைஞரணித் தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ச.அஞ்சுகம், மாநகர மகளிரணிச் செயலாளர் அ.சாந்தி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர் கழகத் தோழர் ப.யாழிசை, பகுத்தறிவுதாசன் இணையர், கண்ணந்தங்குடி தோழர் இராஜதுரை, ஒரத்தநாடு நகர இளைஞரணித் தோழர் பிர பாகரன், மாணவர் கழகத் தோழர் உதயா, திருவையாறு கெளதமன், ப.க.துணைத்தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், தெ.மலர் கொடி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு, ஒரந்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், மாவட்ட ப.க செயலாளர் பாவலர் பொன்னரசு, வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரி, ஒன்றிய ப.க. தலைவர் சோ. இராமகிருஷ்ணன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச. கண்ணன்,நெய்வேலி ஞானசேகரன், ப.க. ஆசிரியர் (ஓய்வு) ந.காமராசு, ப.க. ஆசிரியர் சசிக்குமார், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ. வி.என் குணசேகரன், மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் துரை. ஸ்டாலின், மாநகர மகளிரணிச் செயலாளர் அ.சாந்தி, சேகர் வி.சி.க. இவர்களுடன் பெரியார் பிஞ்சு வீ. மகிழன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இறுதியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்கு மார் வருகை தந்த அனைவருக்கும் நன்றிகூற நிகழ்வு நிறைவு பெற்றது.

நிகழ்வில் தஞ்சை பொதுமக்களும் கழகத் தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *