தமிழர் தலைவருடன் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.20 இலங்கை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் நேற்று (19.12.2025) முற்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி ்அவர்களை சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் சந்தித்து, இலங்கையில் தற்போது நிகழ்ந்துவரும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

1987ஆம் ஆண்டில் ஏற்ப டுத்தப்பட்ட இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தின் சரத்துகள் செயல்ப டுத்தப்படவில்லை.

13ஆவது திருத்தத்தின்படி…

இலங்கை அரசு கொண்டு வந்துள்ள 13 ஆவது திருத்தமும், அதன் வழி உருவாக்கப்பட்ட மாகாண முறைமையும், ஓர் ஒற்றையாட்சி வரையறைக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு முறையாகக் காணப்படுகிறது. இந்த 13ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட முடியாதென்றும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதென்றும், சிறீலங்க உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறுகிறது.

தமிழ்த் தேசம், இறைமை, சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைக்கு சிறீலங்கா வின் அரசியல் அமைப்பு முறைமை மாற்றப்படாதவரை தமிழ்த் தேசத்தினுடைய அடையாளத்தை ஒற்றையாட்சி முறைக்குள் பாதுகாக்க முடியாது என்பதே வரலாற்று அனுபவம் என்பதையும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் எடுத்துக் கூறினர்.

சிறீலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்து…

இந்நிலையில், தொப்புள் கொடி உறவான தமிழ்நாட்டு மக்களும், அவர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்ற தாங்களும், ஏனைய தமிழ்நாடு அரசியல் தரப்பு களும், ஒன்றிய அரசு ஊடாக சிறீலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்து, தமிழ்த்தேசம் சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உரு வாக்கப்படுவதனை உறுதிப்ப டுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஈழத்  தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும் என்று ஈழத் தமிழர் பிரதிநிதிகள் தங்கள் தரப்புக் கோரிக்கையினை எடுத்துக் கூறினர்.

அவர்கள் தரப்பின் கோரிக்கை யைக் கவனமாகக் கேட்டறிந்த திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் உரிய அக்கறை செலுத்தி, எந்தளவு உதவிக்கரம் நீட்ட முடியுமோ அதனை உறுதி யாகச் செய்வோம் என்று எடுத்துக் கூறினார். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். வந்திருந்த ஈழத் தமிழர் பிரதிநிதிகளுக்குச் சால்வை அணிவித்து, தேநீர் அளித்து உபசரித்து வழியனுப்பி வைத்தார்.

வருகை புரிந்தோர்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார், ஈழத்தமிழ் அரசியல் தளத்தின் முக்கிய பிரமுகர்களான மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,  தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர். பொன்னுத்துரை அய்ங்கரநேசன், வழக்குரைஞர் நடராஜா காண்டீபன்    (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), வழக்குரைஞர்  சுகாஷ் கனகரத்தினம்  (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), தமிழ் தேசியக் கட்சியின் பிரமுகர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வருகை புரிந்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *