தமிழ்நாட்டில் 5 ஆயிரம் குழந்தைகள் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிப்பு தடையற்ற சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 20– தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘டைப்-1’ நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்த சுகாதார சவாலை எதிர்கொள்ளவும், குழந்தைகளுக்கு தடையற்ற சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டைப்-1 நீரிழிவு நோய்

டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்கவும், அவர்களுக்குத் தேவையான தொடர் சிகிச்சையை முறையாக வழங்கவும் 2024 ஆகஸ்ட் மாதம் “டைப்-1 நீரிழிவு நோய் பதிவேடு” தொடங்கப்பட்டது.

இந்தப் பதிவேடு தொடங்கப்பட்ட ஒரே ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5,064 குழந்தைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.     மாவட்ட வாரியாக நோய் பாதிப்பைக் கண்டறியவும், இன்சுலின் விநியோகத்தைத் திட்டமிடவும் இந்தத் தரவுகள் அரசுக்கு பெரிதும் உதவுகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் டைப்-1 நீரிழிவு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்தகட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன:

முதற்கட்டமாக: மேலும் 13 சிறப்பு சிகிச்சை மய்யங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்த 6 மாதங்களில்: மொத்தம் 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மய்யங்கள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்தச் சிறப்பு சிகிச்சை மய்யங்களை அமைப்பதே அரசின் முக்கிய இலக்காகும். இந்தச் சிறப்பு மய்யங்கள் மற்றும் பதிவேட்டின் மூலம் பின்வரும் நன்மைகள் உறுதி செய்யப்படுகின்றன:     சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: குழந்தைகளுக்குத் தேவையான இன்சுலின் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்தல்

சுகாதாரக் கொள்கை: திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையில் எதிர்கால சுகாதாரத் திட்டங்களை வகுத்தல். குறைந்த வயதிலேயே இன்சுலின் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த சிறப்பு மய்யங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தூய்மைப் பணியாளர்களுக்கு

புதிய ஓய்வறைகள், தெருநாய்கள் பராமரிப்புக்கு நிதி

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை, டிச. 20– சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறைகள்

இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜான்சி உமா மற்றும் பா.பாலாஜி ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை வன்மையாக கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம் பேசினார்.

மாநகராட்சியில் பணிபுரியும் 29,455 தூய்மைப் பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் உடை மாற்றும் அறை, கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகளை ரூ.29.70 கோடியில் அமைக்க அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆவேசமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல், ராட்வீலர் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பதற்குத் தடை விதிக்கவும், அவற்றுக்கு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கும், உரிமத்தை புதுப்பிப்பதற்கும் இன்று (டிச.20) முதல் தடை விதிக்கவும், இந்த நாய்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது அவற்றுக்கு கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பதை கட்டாயமாக்கவும், இதை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், உரிமம் இன்றி சட்ட விரோதமாக இந்த நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அலுவல கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து, காப்பகங்களில் பராமரிக்கவும், அப்பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, ஒரு நாய்க்கு நாளொன்றுக்கு ரூ.50 பராமரிப்பு செலவாக மாநகராட்சி தருவதற்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய (19.12.2025) கூட்டத்தில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *