ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி 1: ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’ எனும் தலைப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாங்கள் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றியபோது மக்களின் பேராதரவும் அவர்களிடையே காணப்படுகின்ற தன்னெழுச்சியும் தங்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

– ரேவதி சுதாகர், புதுச்சேரி.

பதில் 1: நிச்சயம் எதிர்பார்க்கலாம்; மேலும் மேலும் உழைக்க மக்களின் பேராதரவும் பெரும் ஈர்ப்பும், நல்ல ஊக்கத் தூண்டுதலாக அமைந்துள்ளது. நன்றி.

****

கேள்வி 2: தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்திருப்பதால், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கம், வைரம், வைடூரியம் என்று பெயரி்ட்டு தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என எண்ணத் தோன்றுகிறதே!

– ச. தேன்மொழி, திண்டுக்கல்.

பதில் 2: இதைப் பற்றிய கவலை இன்றி உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று மகிழ்கிறார் பிரதமர். நாடாளுமன்றம் நடைபெறும்போதுகூட அதற்கு எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை. பிறகு இந்நிலை – ஏற்படுவதற்குக் காரணம் கூற வேண்டுமா?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

****

கேள்வி 3: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசு முடிவு செய்திருப்பது ‘பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை’ என்ற நினைப்போ?

– எஸ்.சின்னப்பொண்ணு, வாலாஜாபாத்.

பதில் 3: இறுதித் தீர்ப்பு – சிரிப்பு – இரண்டும் மக்கள் மன்றத்தால் எப்படி தரப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

****

கேள்வி 4: 2025-2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு எழுத்தறிவு வழங்கி அவர்களுக்கு தேர்வு வைத்த நிலையில், ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கைத் தாண்டி கூடுதலாக 733 பேர் வெற்றி பெற்றிருப்பதின் மூலம், தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக ஒன்றிய அரசு அறிவிக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் செய்தி வெளியிட்டிருப்பது திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா?

– கி. துரைராஜ், கிண்டி.

பதில் 4: வெற்றி – பெரும் வெற்றியாகும் – அது பல தடைகளைத் தாண்டிய வெற்றி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

****

கேள்வி 5: உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதல் நடத்தாது என்று உறுதியளித்தால் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முடிவை கைவிடத் தயாராக இருப்பதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா?

– ஜே.ராஜன், கிழக்கு  தாம்பரம்.

பதில் 5: நம்ப முடியாது; ரஷ்யாவின் கடந்த கால நிலைப்பாட்டினை வைத்து யோசித்தால்!

****

கேள்வி 6: தமிழ்நாட்டின் எதிர்காலம் தி.மு.க. தான் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணிக் கூட்டத்தில் “திராவிட மாடல்” நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை 2026இல்  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்களா?

– கே.கோவிந்தராஜ், திருவண்ணாமலை.

பதில் 6: மக்கள் நிரூபிப்பார்கள் என்றாலும்; அவர்கள் ஏமாறாமல் அவர்களைத் தெளிவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கடமை முற்போக்காளர்கள், மதச்சார்பற்ற கொள்கையாளர்கள், ஜனநாயகம் காப்போரின் தனிச்சிறப்புக் கடமையும் அல்லவா?

****

கேள்வி 7: வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த தயாரா? என ஒன்றிய அரசுக்குக் காங்கிரஸ் கட்சி சவால் விடுத்திருப்பதை ஒன்றிய பி.ஜே.பி. அரசு  ஏற்றுக்கொள்ள முன்வருமா?

– ந.திருநாராயணன், ஊரப்பாக்கம்.

பதில் 7: ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி ஏற்காது!இருட்டு கூட வெளிச்சமாகலாம். ‘திருட்டு வாக்குகளால் திசையெட்டும் எமதே’ என்பவர்களின் நிலைப்பாடு மாறுமா? – எதிர்பார்த்தால் நாம் ஏமாளிகள் ஆவோம்!

****

கேள்வி 8: பெருமாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதத்துடன் தமிழ்நாடு முதல் இடம் பெற்றிருப்பதை ‘இந்தியாவுக்கே வழிகாட்டி திராவிட மாடல் அரசு’ என்று ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?

– க.காமராஜ், செய்யாறு. 

பதில் 8: நிச்சயம் நம் மக்கள் மத்தியில் – வாக்காளரிடையே இதனையெல்லாம் திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் – பரப்புரை மூலம் பரப்புவதும் அவசியம்! அவசரம்!!

****

கேள்வி 9: “அவமதிப்பு வழக்குகளில் தண்டிக்கும் அதிகாரத்தைக் கவசமாகவோ, வாளாகவோ பயன்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியிருப்பதை ஏற்று, வரும் காலங்களில் அவை முறையாக பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கலாமா?

– பா.அக்சயா, புதுடில்லி.

பதில் 9: கேளாக் காது – காவி மனப்பான்மை ஊடுருவியுள்ள சில நீதிபதிகளிடமிருந்து இப்படி ஒரு மாற்றத்தை இப்போது எதிர்பார்க்கக் கூடாது.

****

கேள்வி 10: பரபரப்பை ஏற்படுத்திய நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல்காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது என்று டில்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருப்பது ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாமா?

– ஆர்.கார்த்தி, காங்கேயம்.

பதில் 10: மூர்க்கரும், முதலையும் தமது பிடிவாதத்தை மாற்றிக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *