மின்சாரத்திற்கான முழுத் தீர்வு! பூமியில் புதைந்துள்ள மேக்மா ஆற்றல் – சரா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பூமியின் அடியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருகிய நிலையில் இருக்கும் மேக்மா (Magma), உலகின் புதிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரமாக உருவெடுத்துள்ளது.

எரிசக்தி நெருக்கடி

பூமியின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் உலகின் பொருளாதாரத்தை 90 சதவீதம் நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

கண்மூடித்தனமாக எரிக்கப்பட்டதால் வெளிவந்த கரியமில வாயுக்கள் ஓசோன் படலத்தைத் துளைத்து, புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்ட உயர்வுக்குக் காரணமாகி வருகின்றன.

ஒருபுறம் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்க, மறுபுறம் புவியின் ஆழத்தில் எண்ணெய் வளம் குறைந்து வருகிறது.

மாற்று எரிசக்தி?

கச்சா எண்ணெய் உருவானதற்குக் காரணம், மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்கள் மக்கி புவியின் அடியில் உள்ள வெப்பத்தில் மாற்றம் அடைந்ததுதான். இந்த மூல வெப்பத்தை (மேக்மா) நேரடியாக ஆற்றலாகப் பயன்படுத்துவதுதான் விஞ்ஞானிகளின் புதிய இலக்கு.

உலகம் இருக்கும் வரை மேக்மா எரிசக்தி குறையாமல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த முறையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் மின்சாரம் தயாரிக்கலாம்.

‘மேக்மா’வில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை

மேக்மாவின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம்  தயாரிக்கும் முறை, சுமார் 1970களில் அமெரிக்காவில் (ஹவாய் மற்றும் சாண்டியா ஆய்வகம்) ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.

  1. துளையிடுதல்: புவியின் சுமார் 2 முதல் 10 கி.மீ. ஆழத்தில் உள்ள மேக்மாவை நோக்கித் துளையிடப்படுகிறது.
  2. நீர் உட்செலுத்துதல்: துளையிடப்பட்ட குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மேக்மாவை நோக்கி அதிவேகமாகச் செலுத்தப் படுகிறது.
  3. வேதி வினை: சுமார் 600°C முதல் 1300°C வெப்பத்தில், நீர் மேக்மாவுடன் கலக்கும்போது வேதிவினை நிகழ்கிறது.

இந்த வினையில், நீரில் உள்ள ஆக்சிஜன், இரும்பு ஆக்சைடுடன் வினைபுரிந்து, ஃபெர்ரிக் ஆக்சைடு மற்றும் தூய்மையான ஹைட்ரஜன் வாயு மட்டுமே வெளியிடப்படுகிறது.

Temperature and pressure conditions: (600OC & 100mPa)

2FeO + H2O = 2FeO1.5 + H2 (Basalt)(Fluid) (Basalt)(Gas)

  1. மின் உற்பத்தி: வெளியே கொண்டுவரப்படும் அதிவேக ஹைட்ரஜன் வாயு டர்பன்களைச் சுழற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

உலக மற்றும் இந்தியப் பார்வை

உலக எரிபொருளின் தேவைகளில் சுமார் 70% மேக்மா எரிசக்தி மூலம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கச்சா எண்ணெயின் இடத்தை இது பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.  இந்தியாவில் தக்காணப் பீடபூமி, மேற்கு தொடர்ச்சி அடிவாரங்கள் மற்றும் இமயமலை அடிவாரங்களில் மேக்மா கிடைப்பது செயற்கைக்கோள் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.  மாக்மா மின்சார உற்பத்தியில் இந்தியா விரைவில் நடவடிக்கை எடுத்தால், அனல் மற்றும் அணு மின்சாரத்தின் இடத்தைப் பிடித்து, விலை குறைந்த தடையில்லா மின்சாரம் இந்தியா முழுவதும் கிடைக்க வழிவகுக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *