உத்தராகண்டைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் பார்ப்பனர் புண்டரிக் கோஸ்வாமிக்கு உத்தரப் பிரதேச அரசு அளித்த கார்ட் ஆப் ஹானர் எனப்படும் காவல்துறை சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அவர் எதற்கு வந்தார் ஆன்மிக சொற்பொழிவாற்ற வந்தார்.
பொதுவாக வெளிநாட்டு முக்கிய தலைவர்கள் குறிப்பாக அதிபர், ராணுவ ஜெனரல், குடியரசுதலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் வரிசையில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய மரியாதையான ‘கார்டு ஆஃப் ஹானர்’, ஒரு சாமியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்? “பிரிவினைவாத ஹிந்துத்துவ திரைப்படங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்”.

அவர் நடந்து செல்ல சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. சீருடை அணிந்த காவல் துறையினர் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
காவல்துறை உயரதிகாரிகள் அவருக்கு முறையாக சல்யூட் அடித்து வரவேற்றனர்.
ஒரு ஆன்மிக சொற்பொழிவாளருக்கு எந்த அடிப்படையில் இத்தகைய அரசு மரியாதை வழங்கப்பட்டது காவல்துறை விதிகளுக்கு மாறாக இது போன்ற செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது?
சமாஜ்வாடி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
