முதலாளித்துவத் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்த தொழிலாளர் அமைப்புகள் போர்க்கொடியை உயர்த்தின.
1836 – இல் இங்கிலாந்தில் தோன்றிய ‘ சாசன இயக்கம் ‘ உலகின் பெருந்திரள் தொழிலாளர்கள் கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. சாசன இயக்கத்தின் முக்கிய கோரிக் கையாக 10 மணி நேர வேலை முன்வைக்கப் பட்டது.
பிரிட்டனில் 1842 – ஆம் ஆண்டில் சாசன இயக்கம் சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டம், அரசின் அடக்குமுறை மூலம் தோல்வியைச் சந்திக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
ஆனால், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தொழிலாளர் போராட்டம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. 1850-களில் காரல் மார்க்ஸ் சாசன இயக்கத்திற்கு தோன்றாத் துணையாக துணைநின்று பேருதவி புரிந்தது தொழிலாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழி லாளர்கள் போராட்டத்தின் காரணமாக மெல் போர்ன் விக்டோரியாவில் கட்டடத் தொழி லாளர்கள் 8 மணி நேரம் வேலை என்னும் கோரிக்கையை முன்வைத்து உலகிலேயே முதன்முதலில் வெற்றி கண்டனர் எனும் இனிய செய்தி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் முக்கிய நிகழ்வாகும்.
பன்னாட்டுத் தொழிலாளர்களை ஒன்றி ணைக்கும் வகையில் மார்க்ஸ் – ஏஞ்சல் ஆகிய இருவரும் இணைந்து ‘ முதல் அகிலம்’ என்ற பன்னாட்டு தொழிலாளர் அமைப்பை 1864-இல் ஏற்படுத்தினர். உலகம் முழுவதிலும் இருந்த பல நாடுகளின் தொழிலாளர் பிரதிநிதிகள் ஒன்று கூடிய முதலாம் அகிலத்தின் மாநாடு 1850 களில் ஜெனிவாவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றிய காரல்மார்க்ஸ் அவர்கள் 8 மணி நேரம் வேலை, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட வற்றிற்கான உரிமைக் குரலை – உரிமை முழக்கத்தை ஓங்கி எழுப்பினார்.
இதன் காரணமாக, ஊக்கமும் – உற்சாகமும் அடைந்த அமெரிக்க தொழிலாளர் இயக்கங்கள் 1886 – இல் ஒன்றிணைந்து ‘அமெரிக்கத் தொழி லாளர் கூட்டமைப்பு ‘ என்ற அமைப்பை உரு வாக்கி, அதன் வாயிலாக 8 மணி நேரம் வேலை எனும் முக்கிய கோரிக்கையை முன்னெடுத்தனர்.
1886 மே 1-இல் அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இத் தகைய போராட்ட உணர்வுதான் மே தினம் என்பது ‘தொழிலாளர் தினம்’ என்பதாக உருப் பெற்று எழ அடிகோலியது.
1886 மே முதல் நாள் அமெரிக்கத் தொழி லாளர் வர்க்கம் விடுத்த வேலை நிறுத்த அறை கூவலை ஏற்று 4 லட்சம் தொழிலாளர்கள் திரண் டெழுந்து போராட்டத்தில் பங்கெடுத்தனர் என்பதை அறிந்த முதலாளித்துவம் செய்வ தறியாது நிலைகுலைந்து போனது.
1886 மே 3 அன்று நடைபெற்ற தொழிலா ளர்கள் பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 தோழர்கள் தங்களது இன்னு யிரை ஈந்தனர் எனும் வேதனை மிகுந்த செய்தி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.
இதன் வெளிப்பாடாக; மே 4 -இல் சிகாகோ நகரில் ‘ ஹே மார்க்கெட் ‘ திடலில் லட்சோப லட்சம் தொழிலாளர்கள் ஒன்று கூடி கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினார்கள். அப்போதும் காவல்துறை சிறிதும் ஈவு இரக்கமின்றி கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஹே மார்க்கெட் பகுதியே தொழிலாளர்களின் உதிரத்தால் உறைந்து போனது என்பது வேதனையின் உச்சம்.
மேலும், போராட்டத்தைத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்சர் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11 -இல் தூக்கி லிடப்பட்டனர் என்கின்ற கொடுஞ்செய்தி தொழிலாளர் தோழர்களை மீளாத் துயத்தில் ஆழ்த்தியது.
1887 – நவம்பர் 13 அன்று நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களுடைய இறுதி ஊர்வ லத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தங்களது கடும் கண்டனக் குரலை வான் முட்ட எழுப்பி அரசின் அடாவடித்தனத்தை, அராஜகத்தை உலகுக்கு ஓங்கி உரைத்தனர்.
1889 ஜூலை 14-இல் பாரீஸ் நகரில் கூடிய பன்னாட்டு தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் 8 மணி நேர வேலை என்ற உரிமை முழக்கத்தை – போராட்டத்தை மேலும் தீவிர மாக முன்னெடுத்துச் செல்லவும், 1890 ஆம் ஆண்டு மே முதல் நாளை ‘பன்னாட்டு தொழி லாளர் நாள்’ எனவும் கொண்டாடுவது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் தாக்கம்தான் இன்று உலகம் முழுவதும் மே தினத்தை தொழிலாளர் தினமாகக் கொண்டாடி கொண்டாடி மகிழ்வ தற்கு அடித்தளமிட்டது.
இவ்வாறு பல்வேறு சோதனைகளை, இன் னல்களை, இடர்ப்பாடுகளை மற்றும் அடக்கு முறைகளை, அத்துமீறல்களை துணிவுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டு எட்டு மணி நேரம் வேலை என்ற உழைப்பாளர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக ரத்தம் சிந்திய தொழி லாளர் தோழர்களுக்கும், இன்னுயிரை ஈந்த வீர மறவர்களுக்கும் தொழிலாளர் தினமான மே 1 – அன்று;
உழைப்பாளர்களின் உற்ற தோழராக விளங்கிய, அவர்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழு வதும் போராடிய தந்தை பெரியார் அவர் களின் தத்துவ வாரிசு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இரவு – பகல் பாராமல் ஊண் உறக்கமின்றி உழைக்கின்ற தோழர்கள் அனைவரும் ஒன்றுகூடி வீர வணக்கம்! செலுத்த ஆயத்தமாக உள்ளனர் என்பது கையொலி எழுப்பி வரவேற்க வேண்டிய செய்தியாகும்.
சிறக்கட்டும் மே தினம்!
வெல்லட்டும் தொழிலாளர்கள்!
– சீ. இலட்சுமிபதி,
தாம்பரம்.