புதிய அமைப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிதிமுறைகள் (ரெகுலேசன்ஸ்) 2023′ கொண்டு வந்து இருக்கிறது.
கனமழை
வளி மண்டலக் கீழடுக்கில் கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் தகவல.
பொதுப் பயன்பாட்டிற்கு…
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடியில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்டப் பணிகள், முடிந்து ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
இணையவழிப் பயிற்சி
பொருள்கள் சேவை, வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணயைவழி பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்துகிறது. மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. கூடுதல விவரங்களை பெற விரும்புவோர் ஷ்ஷ்ஷ்.மீபீவீtஸீ.வீஸீ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
உண்மைக்கு புறம்பாக
தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளதாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு 95 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் பதவிகளுக் கான முதல் நிலை தேர்வை 1.91 லட்சம் பேர் எழுதினர் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவு
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப் படவுள்ள பள்ளிகள் உள்பட, 38 மாவட்ட மாதிரி பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப் பணியாக பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களிடம்
தமிழ்நாடு மக்களிடம் இருந்து, ஆட்சி அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் மேனாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
உறவு
எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனாவுடனான நட்புறவு இயல்பு நிலையில் இல்லை என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தகவல்.