படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.19- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணிவரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேரவிரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற இணைய தள  வாயிலாக 22.12.2025 முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில், தமிழ்நாடு அரசால் நடைமு றைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸின் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 27 இல் கூடுகிறது

புதுடில்லி, டிச.19 காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர் அதிகார அமைப்பான செயற்குழுவின் கூட்டம் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசின் நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு நடைபெறும் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 2026-இல் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இக்கூட்டத்தில் இதற்கான வியூகம் வகுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து வேலைக்கான உரிமையை அரசு பறிப்பதாகவும், இதற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *