இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்புப் பணியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அலுவலர்கள் உடனிருந்தனர்.
