ஒன்றிய அரசு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் (MGNREGS) நோக்கத்தைச் சிதைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இது மன்னிக்க முடியாத துரோகச் செயல். மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘காந்தியைக் கொலை செய்ததைவிட கொடிய செயல்!’
ப.சிதம்பரம்
காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், திட்டம் (100 நாள் வேலை) செயல்படுத்துவோம் என்பது காந்தியைக் கொலை செய்ததைவிட கொடிய செயல் என ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். காந்தி மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது எனக் கூறிய அவர், இந்திய வரலாறு 2014-இல் தொடங்கியது என பறைசாற்றியவர்கள், இன்னும் எத்தனைக் கொடுமைகளை செய்வார்கள் என பார்க்கலாம் என்று சாடியுள்ளார்.
