திருப்பரங்குன்ற வழக்கில் முழுக்க முழுக்க தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்ட
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம் ஏன்?
‘‘இம்பீச்மெண்ட்’’ செய்ய 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம் ஏன்?
‘‘இம்பீச்மெண்ட்’’ செய்ய 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, டிச.18 திருப்பரங்குன்ற வழக்கில் முழுக்க முழுக்க தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம் ஏன்? இவை அத்தனையும், 24 மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்? இது தமிழ்நாட்டுக்குப் பெருமையா? ‘‘இம்பீச்மெண்ட்’’ செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 107 பேர், மக்களவையிலிருந்து கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்துக்கு, இது பெருமையா? ஏற்கத்தக்கதா? இது நீதித்துறைக்கு இழுக்கல்லவா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- திருப்பரங்குன்ற வழக்கில் முழுக்க முழுக்க தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம் ஏன்? ‘‘இம்பீச்மெண்ட்’’ செய்ய 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்!
- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
- 24 மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்!
- முழுக்க முழுக்க தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்டவர்!
- நீதிபதியின் செயல், தமிழ்நாட்டுக்குப் பெருமையா?
- நீதித்துறைக்கு இழுக்கல்லவா?
- நீதித்துறையின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக…
- மக்களுடைய கடைசி நம்பிக்கை நீதித்துறை தானே!
- இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு!
- அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 பிரிவுகள்!
- கட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!
- அரசாங்கம்தானே பதில் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்!
- சட்டத்தில், எந்த இடத்தில் அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது?
கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பகுத்தறிவுவாதியாக இருக்கின்றவர்கள்…
கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கிறவர்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. நான் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் எடுக்கிறேன் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. இரண்டையும் கொண்டுவந்த பெருமை அண்ணல் அம்பேத்கர் அவர்க ளுக்கு உண்டு. பகுத்தறிவுவாதியாக இருக்கின்றவர், அந்த கருத்தைச் சொல்லலாம், அதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
Form of oath or affirmation to be made by the Judges of a High Court
“I, A.B., having been appointed Chief Justice (or a judge) of the High Court at (or of)
do solemnly and sincerely promise and declare that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will oppose the sovereignty and integrity of India. I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favour, affection or illwill and that I will uphold the Constitution and the laws.’’
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘நான், [நீதிபதியின் பெயர்], உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக (அல்லது நீதிபதியாக) நியமனம் செய்யப்பட்ட பிறகு, கடவுளின் பெயரால் அல்லது உளப்பூர்வமாக சத்தியம் செய்கிறேன். இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசு வாசத்தையும் நான் தாங்குவேன் என்று உறுதி யளிக்கிறேன்.
நான் எனது பதவியின் கடமைகளைப் பயம் அல்லது தயவு, பாசம் அல்லது தீமை யின்றி, முறையாகவும், உண்மையாகவும், மன சாட்சிப்படியும் செய்வேன் என்றும், இந்திய அரசியலமைப்பையும் சட்டங்களையும் நிலை நாட்டுவேன் என்றும் சத்தியம் செய்கிறேன் (அல்லது உறுதியளிக்கிறேன்).’’
இந்த உறுதி மொழி எடுத்துக்கொண்டுதான், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கிறார்கள். வேண்டுமானால் ஒரு சில வாசகங்கள் மாறியிருக்கலாம்.
24 மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்!
அதன்படிதானே உயர்நீதிமன்றத்தில் பதவி யேற்றார் ஜி.ஆர். சுவாமிநாதன் என்ற நீதிபதி. திருப்பரங்குன்ற வழக்கில் அவர் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம், அவருக்கு ஆத்திர அவசரம் ஏன்? இவை அத்தனையும், 24 மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்திருக்கிறார் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
முழுக்க முழுக்க
தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்டவர்!
தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்டவர்!
தனிப்பட்ட முறையில அவர் மீது நமக்கு என்ன கோபம்? அவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால், பல நேரங்களில், முழுக்க முழுக்க தான் ஓர்
ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்டவர். அவர் நீதிபதியாக ஆவதற்கு முன்பு வழக்குரைஞராக இருந்திருப்பார். அவருக்கு எந்தக் கொள்கை வேண்டு மானாலும் இருக்கலாம். அந்தக் கொள்கை விட்டு விடுங்கள் என்று சொல்வது நம்முடைய வாதம் அல்ல. நீதிபதியாக ஆவதற்கு முன்பு, அவர் ஆயிரம் கொள்கை வைத்திருக்கலாம்; ஆர்.எஸ்.எஸ்.காராக இருக்கலாம்; ஷாகாவில் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால், நீதிபதியாக ஆன பிறகு, அதே உணர்வை நீங்கள், உங்கள் கடமையைச் செய்யும்போது காட்டி னால், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அது நியாயமா? ஏற்கத்தக்கதா? பதவிப் பிரமாணத்தின்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே, அந்த உறுதிமொழியை நீங்கள் ஒவ்வொரு தீர்ப்பிலும் காட்டி இருக்கிறீர்களா என்று கேட்பதுதான் இங்கே யோக்கியம்.
உதாரணத்துக்கு அவரைச் சொல்லுகிறோமே தவிர, நண்பர்களே, மற்ற எல்லா நீதிபதிகளுக்கும், அது பொருந்தக் கூடிய ஒன்றாகும். இல்லை என்று மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எங்கு நடந்தாலும், அதை யாரும் சுட்டிக்காட்டலாம். சுட்டிக் காட்ட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
நீதிபதியின் செயல்,
தமிழ்நாட்டுக்குப் பெருமையா?
தமிழ்நாட்டுக்குப் பெருமையா?
அந்த அடிப்படையிலே பார்க்கும்போது நண்பர்களே, நம்முடைய நீதிபதி அவர்கள் அவரும் பதவிப் பிரமாணம் எடுத்தபடி, அவர் கடமையைச் செய்திருக்கிறார். உங்களுக்கு உணர்வு இருந்தது என்றால், அந்த உணர்வுகளை நீதிபதியான பிறகு காட்ட முடியுமா? வழக்கு ரைஞராக இருக்கும்போது ஒரு கட்சியில் கூட இருந்திருக்கலாம் நீங்கள். ஆனால், அதை நீதிபதியான பிறகு காட்டுவது சரியா? உங்கள் நடவடிக்கைகள் உங்கள் கொள்கையைப் பிரதிபலிக்கக் கூடிய அளவில் இருக்கிறதே. அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இது தமிழ்நாட்டுக்குப் பெருமையா? தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
நீதித்துறைக்கு இழுக்கல்லவா?
‘‘இம்பீச்மெண்ட்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையிலிருந்து கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்; இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கலாம். ஆனால், தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்துக்கு, இது பெருமையா? ஏற்கத்தக்கதா? இது நீதித்துறைக்கு இழுக்கல்லவா?
நீதித்துறையின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக…
முதலில் அந்தப் பொது உணர்ச்சியோடு பாருங்கள். தனிப்பட்ட முறையிலே பார்ப்பதை விட அது மிகவும் முக்கியமானது. தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வழக்கு, அதுவும் அரசியலமைப்புச் சட்டப்படி பேசுகிறோம். ஏனென்றால், இந்தக் கூட்டத்தின் தலைப்பு என்பது மிக முக்கியமான தலைப்பாகும். ‘‘மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதமாகலாமா?’’ என்பது பற்றி சட்டப் பூர்வ ஆய்வுரை அரங்கம். இது ஏனோதானோ என்று பேசிவிட்டுப் போவதல்ல. பொதுக்கூட்டங்களில், இவர்களே, அவர்களே என்று பேசிவிட்டு, இது அவர் கொடுத்தார், இவர் ‘‘சிக்சர்’’ அடித்தார்; அவர் உடனே ‘பஞ்ச்’ கொடுத்தார் என்று ‘‘பஞ்ச் டயலாக்’’ சொன்னார் என்பது அல்ல. இது முழுக்க முழுக்க, காலம் தாண்டி நிற்க வேண்டிய, கடமை உணர்வை நினைவூட்ட வேண்டிய ஒன்று. நீதித்துறை யினுடைய மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம்.
மக்களுடைய
கடைசி நம்பிக்கை
நீதித்துறை தானே!
கடைசி நம்பிக்கை
நீதித்துறை தானே!
மக்களுடைய கடைசி நம்பிக்கை நீதித்துறை தானே! நிர்வாகத்துறை (Executive) செய்யலாம், அதே மாதிரி நாடாளுமன்றத்தில் (Legislature) நடக்கலாம்; அது செல்லுமா, செல்லாதா? என்று சொல்ல வேண்டிய மிக முக்கியமான இடத்தில் இருக்கிற நீதித்துறை, இப்படிப்பட்ட மிகப்பெரிய தவறான எண்ணங்களைக் கொண்டு, தங்களுடைய ஆசாபாசங்களுக்கு எல்லாம் அங்கே உருவம் கொடுக்கவேண்டும், நடை முறைப்படுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை தோன்றலாமா?
மூன்று வழக்குகள் பற்றி இங்கே சொன்னார்கள். அவர்கள் சொன்னதற்கு மேலே நான் அடுத்த கட்டத்துக்குச் செல்லுகிறேன். முதலில் தெளிவாக மதப் பிரச்சினைகள் என்று வரும்போது, ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் விளக்கம் அளித்திருக்கிறது.
இந்தியா
பன்முகத் தன்மை கொண்ட நாடு!
பன்முகத் தன்மை கொண்ட நாடு!
தங்களுடைய ஆசாபாசங்கள், தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறார்களா என்று தெரியாது. ஆனால், யார் கொடுத்தாலும், அது எவ்வளவு பெரிய தவறு என்பதற்கு, அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடம் இருக்கிறது. மதப் பிரச்சினை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நாடு பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் அத்தனையும் இருக்கிற ஒரு பெரிய நாடு. ‘‘புளூரலிசம்’’ (pluralism) என்று சொல்லக்கூடிய பன்முகத் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட இந்தப் பன்முகத் தன்மையைக் காப்பாற்ற வேண்டியதுதான் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய கடமை. அந்த அரசியலமைப்புச் சட்டத்தினுடைய கடமையிலிருந்து தவறினார்கள் என்று சொன்னால், நாம் எங்கே போய் நியாயம் கேட்கிறோம்? நீதித்துறையிடம் போய்தான் நியாயம் கேட்க வேண்டும். அது உயர்நீதிமன்றமாக இருக்கலாம்; அடுத்தது உச்சநீதிமன்றமாக இருக்கலாம். எனவே அந்த நிலை ஏற்படலாமா? சகோதரர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் மிக அழகாக அதைச் சுட்டி காட்டினார்கள். ஒரே வரியில் சுருக்கமாக சுட்டிக் காட்டினார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்
25, 26 பிரிவுகள்!
25, 26 பிரிவுகள்!
இப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த பிரச்சினைகளில், அவசரமாக வருவது, மேல்முறையீடு செய்வது, ‘இந்தக் கோயிலில் நிர்வாகிகளுக்கும் உரிமை இல்லையா?’ இப்போது புதிதாகக் கேட்கிறார். ‘அந்த உரிமை இல்லையா?’ ‘மத உரிமை இல்லையா?’ என்றெல்லாம் கேட்டு, ஒரு மயக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். நண்பர்களே, அரசியலமைப்புச் சட்டத்தில், ‘மதச் சுதந்திர உரிமை’ என்பது இருக்கி றது. அந்த மதச் சுதந்திர உரிமை என்பது எப்படி ஆரம்பிக்கிறது? 25, 26. மதச் சுதந்திர உரிமை என்று இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 25, 26 என்று சொல்லக்கூடியவற்றில், இருக்கிறதே, அந்த சுதந்திர உரிமை, அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். இது அறிவார்ந்த அரங்கம். வழக்குரைஞர்கள் இருக்கிறீர்கள்; எல்லா துறையிலும் விவரம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள்.
‘‘மத சுதந்திர உரிமை’’ என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் (Article) 25, 26 ஆகிய பிரிவுகளில் இருக்கிறது. ஆனால், அது, லகான் இல்லாத குதிரையா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். மத சுதந்திர உரிமை அவர்கள் எப்படி கொடுத்து, எதைச் சொல்லுகிறார்கள்? தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மதச் சுதந்திர உரிமை உண்டு. ஆனால், அந்த மதச் சுதந்திர உரிமை என்பதில் மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி.
கட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!
Right to Freedom of Religion (Indian
Constituion 25)
மதச் சுதந்திர உரிமை என்பது Not an absolute Right. வரம்பில்லாமல், அதை யாருமே கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை இல்லை! நான் நினைத்தால், அதுதான் நடக்கும்; நான் உத்தரவு போட்டால் அதுதான் நடக்கவேண்டும். நான் செய்ய வேண்டும், என்னுடைய மதம், நான் பெரும்பான்மையாக இருக்கிறோம். 87 சதவிகிதமாக இருக்கிறோம் என்று சொல்லும் நிலை உண்டா? நீங்களெல்லாம் சிறுபான்மையாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், மதம் உள்ளவர்களுக்கு எப்படி உள்ளதோ, அதுதான் மிகவும் முக்கியம். அந்த உரிமைக்குக் கட்டுப்பாடு உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதை நன்றாக கவனிக்க வேண்டும்.
Subject to Public Order , health, and morality and to the other provisions of this Part என்றுதான் தொடங்குகின்றது.
பொது அமைதி, சுகாதாரம், இவை அத்தனைக்கும் இது கட்டுப்பட்டதுதான். இதற்கு என்ன அர்த்தம்? கலவரம் வரும் என்றால், ஓர் அரசாங்கம் பொது அமைதியைக் காக்க வேண்டும். ஒரு நெரிசல் ஏற்பட்டு எல்லாரும் இறந்துவிட்டால், யார்மீது குற்றம் சொல்கிறீர்கள், முதலில்?
அரசாங்கம்தானே பதில் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்!
அரசாங்கத்தைத்தான் சொல்வார்கள். அது கும்பமேளாவில் நடந்தாலும் சரி, அல்லது திருவிழாவில் நடந்தாலும் சரி, கிரிக்கெட் வீரர்களுக்கான பாராட்டு விழாவாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சினிமா நடிகர், இப்போது எல்லா இடங்களிலும் வெளியில் இருந்து ‘தரிசனம்’ கொடுக்கிறார்களே! அவர் மூடிய வாகனத்தில் சென்றிருந்தபோது, கரூரில் பேசியபோது, எத்தனை பேர் இறந்து போனார்கள்?
அன்றைக்கு நடந்த உயிரிழப்புகளுக்கு அர சாங்கம்தானே பதில் சொல்ல வேண்டும் என்று சொல்கி றார்கள். எப்படியாவது இந்த அரசாங்கத்துக்கு ஓர் இழிவை, ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்று அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
பொது அமைதி என்பது அதுதான். சட்டம், ஒழுங்கு, அமைதி என்பது முழுக்க முழுக்க யாரைச் சார்ந்தது? அரசைச் சார்ந்தது. இங்கே அய்யா சொன்னார் பாருங்கள், ‘‘இந்த விளக்கை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள்; நீங்கள் அவர்களைக் கூட்டிட்டுப் போங்க; 10 பேர் போனால், நீங்களே கையில் எடுத்துக் கொள்ளலாம்; நீங்கள் தனியாவும் போகலாம்; அல்லது வழக்குப் போட்ட வரே 10 பேருடன் நுழையலாம்’’ இந்த மாதிரி தீர்ப்பு சொன்னால், ராஜ்ஜியம் நடத்துகின்றவர் சுவாமிநாத நீதிபதியா?
சட்டத்தில், எந்த இடத்தில் அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது?
நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் சொல்கிறார். உங்க ளுக்கு என்ன அதிகாரம்? தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் போங்கள் என்று சொல்வதற்குச் சட்டத்தில், எந்த இடத்தில் அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது? இதைக் கேட்கிறோம், இப்படி கேட்கும்போது, அதற்குப் பதில் இல்லை.
அதுவும், அரசுக்கு தாக்கீது, உரிய அவகாசம் எதுவும் கொடுக்காமல், தமது இஷ்டத்திற்கு செயல்பட்டால், அது சட்டப்படி ஏற்கத்தக்கதா? நியாயமா?
(தொடரும்)
