சென்னையில் மட்டும் 15 லட்சம்? எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.18- எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி (வெள்ளி) அன்று வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத கணக்கின் படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்படுகின்றனர். சென்னையில் மொத்தமாக 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள், அதாவது 15 லட்சம் வாக்காளர்கள் எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் நீக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.அய்.ஆர். பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தற்போது வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பெயர் விடுபட்ட, இடம் பெயர்ந்த, போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *