உண்மை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 5ஆவது நிகழ்வாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 13-12-2025 திருத்தணியில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் மா.மணி தலைமை ஏற்க, தேவ.நர்மதா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு, ஆசிரியர் அவர்களின் சமூகநீதி, பகுத்தறிவு, திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உரையாற்றினார்.
