எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டுகள் நடவடிக்கை தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைத்து எது காரணமோ, எது வசதியோ அதற்குப் பெயர்தான் அரசியல் என்பது என்ற அரசியல் அயோக்கியத் தனம் ஒழிக்கப்பட்டாக வேண்டாமோ?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
