மண்ணச்சநல்லூர், டிச. 17- இலால்குடி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடியேற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது என கழக இளைஞரணி அமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 14.12.2025 ஞாயிறு காலை 10.00 மணியளவில் நகரச் செயலாளர் மண்ணச்சநல்லூர் க. பாலச்சந்திரன் இல்லத்தில் லால்குடி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பு கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமை வகித்து கருத்துரையாற்றினார். மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் க.பாலச்சந்திரன், அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டக் காப்பாளர் ப.ஆல்பர்ட், மாவட்டத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜா, மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்ட துணைத் தலைவர் க.ஆசைத்தம்பி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
பொதுக்குழு உறுப்பினரும். நகரத் தலைவரான முத்துச்சாமி, மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.ப.பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் த.இராஜோந்திரன், மாவட்ட கலைத்துறை செயலாளர் பாச்சூர் வே.அசோகன், பாவேந்தன், திரும்பச்சேரி முருகேசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சு.பணிமலர்ச்செல்வன், திராவிட மாணவர் கழகத் தலைவர் அ.அவனிக்கோ இளந்திரையன், வாழ்மாபாளையம் பிச்சை, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். ஏராளமான கழகத் தோழர்கள் இளைஞரணித் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒன்றிய இளைஞரணித் தலைவர் யுவராஜ், நன்றி கூறினார்
தீர்மானங்கள்
வாழ்மாலைபாளையம் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாச்சலம் (வயது 90) ஆத்தூர் கழக மாவட்டக் காப்பாளர் ஏ.கே.தங்கவேலு, (வயது 104) ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தையும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது.
மண்ணச்சநல்லூர் ஒன்றியம் முழுவதும் கழக இளைஞரணி சார்பில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கழக இலட்சியக் கொடி ஏற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 10 க்கு மேற்பட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய இளைஞரணி பொறுப்பாளர்
மண்ணச்சநல்லூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். நொச்சியம் அரவிந்த்.
