இன்றைய கால சூழ்நிலைக்கு தந்தை பெரியார் கொடுத்திருக்கிற புரட்சிகரமான அறிவுரையும் ஆழமான சிந்தனையும் மிக அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பு, கல்வி, சீர்திருத்தம், பெண் அடிமை ஒழிப்பு இவையெல்லாம் பெரியார் அவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார். இவற்றையெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே பெரியார் சிந்தித்துச் செயல்பட்டு இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்.
அதற்குக் காரணம் அவருடைய முன்னோக்கிய சிந்தனை. அரசியலும் மதங்களும் சாதிக்காததை தனி ஒரு மனிதனாக நின்று சாதித்திருக்கிறார். எல்லா புரட்சிகளுக்கும் அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். புத்தகக் காட்சியில் பெரியார் நூல் அரங்கத்திற்கு வந்திருந்த நடுத்தர வயது உள்ளவர் கூறிய கருத்துக்கள் பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்ற தலைப்பில் Periyar Vision OTT-இல் வெளியாகி உள்ளது. இன்றே முழுமையாக காணுங்கள்.
– வி.அமிர்த நாயகம், மும்பை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

