பெரம்பலூர்,நவ.7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.11.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் தொடங்கி பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் அவர்களின் தலை மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு, மாவட்ட அமைப்பாளர் துரைசாமி நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் பெ.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் மு.விச யேந்திரன் வரவேற்புரையோடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழர் தலைவர் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித் தும் விடுதலை சந்தா சேர்ப்பது பற்றியும் தலைமை கழக அமைப் பாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் உரை யாற்றினர்.
திருச்சியில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை ஏற்று சிறப்பாக செயல் படுத்துவது எனவும், ஒன்றிய பாஜக அரசின் விஸ்வகர்மா யோஜனா என்ற மனு தர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்தும், ஜாதி ஒழிப்பு மாவீரர்களை கொண்டாடக் கூடிய வகையிலும் தெருமுனைக் கூட்டங்களை நடத்திடுவது எனவும், தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடப் பேரி னத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை எழுச்சி யோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வகையில் அறிவார்ந்த கருத் தரங்கம் நடத்துவது எனவும், இனமானம் காக்கும் விடுதலை நாளேட்டிற்கு சந்தாக்களை திரட்டுவதோடு மட்டுமல்லாமல், கழக உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் கண்டிப்பாக ‘விடுதலை’ நாளிதழை வாங்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
பங்கேற்றோர்
துரைசாமி, அரங்கராசன், ஆறுமுகம், துரைசாமி, நகர அமைப்பாளர் அண்ணா துரை, ஆலத்தூர் ஒன்றிய தலை வர் இரவிக்குமார், பெரியார் பெருந் தொண்டர் அரங்கய்யா, மருத்து வர் லகாந்தி, நடராஜன், வா.களத்தூர் அமைப்பாளர் சர்புதீன், மணிகண்டன், பகுத்தறிவாளன், மாவட்ட இளைஞர் அணி செய லாளர் சரவணன், மதியழகன், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.